Varagu
Products: 1Home / Healthy Foods / Grains / Millets / Varagu
Category Description
Varagu

வரகு

வரகு அரிசி, கோதுமையை விட சிறந்தது. இதில் நார்ச்சத்து அதிகம். இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும். இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது.  தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். வரகு,  பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம். இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி  இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம்,பொங்கல்,பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம். இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு, மூட்டுவலியை குறைக்க உதவுகிறது. சர்க்கரை அளவை குறைக்கிறது. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு. நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்

 
Sort by: name (inc/dec), price (inc/dec), rating (inc/dec)
Thinai Varagu Dosai Mix
INR.90.00
INR.110.00
In stock: Yes

திணை, வரகு தோசை மிக்ஸ்

திணை உடலுக்கு அதிக சத்து மற்றும் பலத்தை அளிக்கும். வாயுக்கேளாறு, வீக்கம், வாதம், கபம், பித்தம் நீங்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினை சாப்பிடலாம். இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது
வரகு உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு, மூட்டுவலியை குறைக்க உதவுகிறது. சர்க்கரை அளவை குறைக்கிறது. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு. நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.

செய்முறை: தேவையான அளவு திணை, வரகு தோசை மிக்ஸை எடுத்துக்கொண்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து மாவை கரைக்க வேண்டும். சின்ன வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, சிறிதளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் கரைத்து தோசை வார்க்கவும்.

கூடுதல் சுவைக்கு: கேரட் துருவல், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிப்பிளவர் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சீரகம் தாளித்து கரைத்து தோசையாகவும், காய்கறி இட்லியாகவும் ஊற்றி கொள்ளலாம். 

சேர்க்கப்பட்ட பொருட்கள்:
திணை, வரகு, கருப்பு உளுந்து, சீரகம், மல்லி விதை, கருவேப்பிலை.

Best Before Last Week of March 2014.

Thinai Varagu Dosai Mix
Read more
Sort by: name (inc/dec), price (inc/dec), rating (inc/dec)
   
     
New products (Horiz. scroll)
 
New products (static)
 
INR.90.00
INR.50.00
 
     
 
Popular (static)
 
INR.50.00
INR.50.00